பாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!
அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.
அதற்கமைய விளையாட்டு போட்டிகள், விவாத போட்டிகள் மற்றும் சாகித்திய போட்டிகள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச அகில இலங்கை போட்டிகளில் மாத்திரம் ஈடுபடுவதற்கு பாடாசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
கல்வி ஊழியர்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுமுறை பெற்றுக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.