பிரவீன் ஜயவிக்ரமவின் புதிய சாதனை!

பிரவீன் ஜயவிக்ரமவின் புதிய சாதனை!

தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை அறிமுக வீரர் பிரவீன் ஜயவிக்ரம தனதாக்கிக்கொண்டார்.

பங்களாதேஷுடனான இரண்டாவது போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணிக்கெதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அத்துடன், பங்களாதேஷ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் ஊடாக இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

அதற்கமைய, தனது முதல் இரு போட்டிகளில்  பிரவீன் ஜயவிக்ரம 178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக  தனது அறிமுகப் போட்டியில் 44 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அகில தனஞ்சய இந்த சாதனையை தன்னகத்தே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.