கொல்கத்தா அணியினருக்கு கொவிட்? - இன்றைய போட்டி பிற்போடல்

கொல்கத்தா அணியினருக்கு கொவிட்? - இன்றைய போட்டி பிற்போடல்

இன்று (03) மாலை நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சி நிரலில் உள்ளது.


எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வொரியர் ஆகியோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

இதனையடுத்து, இன்றைய போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.