புத்தர் சிலை வைத்திருந்த அறையை சேதப்படுத்தி இரும்பு கம்பிகளை திருடிய நபர் கைது

புத்தர் சிலை வைத்திருந்த அறையை சேதப்படுத்தி இரும்பு கம்பிகளை திருடிய நபர் கைது

காங்கேசன்துறை - நல்லிணக்கப்புரம் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சேதம் விளைவித்து இரும்பு  கம்பிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைதானவர் மது அருந்துவதற்குத் தேவையான பணத்தைப் பெறும் நோக்கில் இரும்பு கம்பிகளைத் திருடியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சிலை வைக்கப்பட்டிருந்த அறைசேதமடைந்த போதிலும், புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தவோ அல்லது ஏற்பட்டோ இல்லையென காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.