தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால் விவசாயிகள் அசௌகரியம்!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தைத் தொடர்ந்தும் மூடிவைப்பதால் கொரோனா பரவும் அச்சுறுத்தல் நிலவுவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் தலைவர் நாமல் கருணாரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாளாந்தம் தமது பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தகர்கள் புதிய இடங்களை நாடுவதன் ஊடாக கொவிட்-19 பரவும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மரக்கறி வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள், இடைத்தரகர்களிடம் சிக்குண்டு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் கடந்த 26 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.