437 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி

437 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி

இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.

போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 9 விக்கட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதற்கமைய பங்களாதேஷ் அணி  437 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட ஆரம்பித்துள்ளது.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில், 7 விக்கட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 251 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.