
குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை தொற்று! பெற்றோருக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொற்று நோய் பரவி வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருக்கின்றார்.
Hand, foot and mouth disease என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியது எனவும், இது தொடர்பில் அவதானமான இருக்குமாறும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.