அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது அ.தி.முக.,வின் கலை இலக்கிய அணி செயலாளராகவும் உள்ள பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
இத்தொற்று காரணமாக எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், தி.மு.க., அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தலா 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர், அம்மன் அர்ஜூனன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது அ.தி.மு.க.,வின் கலை இலக்கிய அணி செயலாளராகவும் உள்ள பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது