கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 414 பேர் அடையாளம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 414 பேர் அடையாளம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 414 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,444ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் ஏற்கனவே 1077 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி நாட்டில் நாள் ஒன்றில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்.

இன்று இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1491 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது