குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுபவரா நீங்கள்? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுபவரா நீங்கள்? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போதைய கொவிட்-19 நிலைமைகளுக்கு மத்தியில் மூடிய அறைகளுக்குள் தொழில் செய்வது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் கடமைகளைச் செய்யும்போது ஒருவர் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.