உப தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
கொரோனா பரவல் காரணமாக உப தபால் நிலையங்களை திறந்து வைக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் உப தபால் நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருந்தன.
அத்துடன், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உப தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்