இராகலை – மாகுடுகலையில் பேருந்து விபத்து: பலர் காயம்!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகுடுகலை பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று(29) இடம்பெற்ற இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைபொரஸ்ட் பிரதேசத்திலிருந்து இராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த பயணிகள் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் ஐவர் அவசர சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்