நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 228 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, நாரஹேன்பிட்டியில் 19 பேரும், பொரளையில் 18 பேரும் தெமட்டகொடையில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கம்பஹாவில் 209 பேருக்கும், குருணாகலில் 172 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கம்பஹா மாவட்டத்தில் 209 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் திவுலபிட்டிய பகுதியில் 25 பேருக்கும், பியமகயில் 16 பேருக்கும், கடவத்தையில் 15 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம், குருணாகல் மாவட்டத்தில் 172 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 133 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 119 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 86 பேருக்கும், மொனராகலை மாவட்டத்தில் 58 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 44 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 47 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.