மேல் மாகாண மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த தகவல்

மேல் மாகாண மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த தகவல்

மேல் மாகாணத்தில் பொலிஸார் நடத்திய ஆய்வில் 12 வீத மக்கள் பொது இடங்களில் முககவசம் அணிவதில்லை எனவும் 50 வீதத்துக்கும் அதிகமானோர் சமுக இடைவெளியை பின்பற்றவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத்தில் நேற்றையதினம் 110 பொலிஸ் பிரிவுகளில் 10,308 பேரிடம் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் 1383 பேர் அல்லது 12.8 வீதமானோர் முககவசம் அணியவில்லை என்பது தெரியவந்தது. ஏனைய 3060 பேர் அல்லது 28 வீதமானோர் முறையாக முககவசம் அணியவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் 3500 பேர் அல்லது 50.9 வீதமானோர் சமுக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் முககவசம் அணியாததால் 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த தொகை நான்கு நாட்களில் 600 ஆக அதிகரித்துள்ளது.