சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது ஸ்ரீலங்கா

சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது ஸ்ரீலங்கா

இந்தியாவில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் புதுடில்லியில் கொரோனா தொற்று மோசமடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு வருகைதரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வருகைதருவோர் ஏனைய சுற்றுலாப் பயணிகளுடன் அவர்கள் தொடர்புகளை பேணாத வகையில் தனியான ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவார்கள் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.