சீன பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் மஹிந்தவையும் சந்தித்தார்!

சீன பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் மஹிந்தவையும் சந்தித்தார்!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெயி பென்ஹே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டை வந்தடைந்த அவர், நாளை வரை நாட்டில் தங்கவுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்தார்.

அதன்போது, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது