ஹோட்டலில் திருமணம் - புதுமணத்தம்பதியருக்கு கொரோனா

ஹோட்டலில் திருமணம் - புதுமணத்தம்பதியருக்கு கொரோனா

ஹோட்டலொன்றில் நடைபெற்ற திருமணத்தில் புதுமணத்தம்பதிகள் உட்பட அறுவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி எல்லாவில பிரதேசத்தில் உள்ள கிதலெல்லா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்விலேயே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதிகள் மற்றும் நான்கு பேர் தொற்றுக்குள்ளானதாக பிரதேச சுகாதார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் மணமகளின் தாய் உட்பட உறவினர்களும் அடங்குவர். அவர்கள் கும்பல்வெலா மற்றும் மகுலெல்லாவில் வசிப்பவர்கள் என்று சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன நெருங்கிப் பழகியவர்களை கண்டறியும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.