சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான அஸ்ராசெனெகா தடுப்பூசி 2ஆம் செலுத்துகை நாளை முதல்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான அஸ்ராசெனெகா தடுப்பூசி 2ஆம் செலுத்துகை நாளை முதல்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ராசெனெகா தடுப்பூசி 2ஆம் செலுத்துகை நாளை முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், முதலாவது தடவை செலுத்தப்பட்ட 5,153 பேருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 8ஆம் திகதிவரை சிறைச்சாலை தலைமையகம், வெலிகட சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளின் உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது தடுப்பூசி செலுத்தப்படும்