நேற்றைய தினம் 1111 கொரோனா தொற்றாளர்கள் பதிவு
இன்று (28) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,111 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் நாட்டில் அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இது கருதப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
உள்நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 200 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 198 நபர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் பதுளை மாவட்டத்தில் 20 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 17 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 28 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் மூவருக்கும் கண்டி மாவட்டத்தில் 74 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 55 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 08 நபர்களுக்கும் யாழ். மாவட்டத்தில் 09 பேருக்கும் மாத்தளை மாவட்டத்தில் 32 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 நபர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் ஐவர், பம்பலப்பிட்டி பகுதியில் இருவர், பொரளை பகுதியில் இருவர், மருதானை பிரதேசத்தில் ஒருவர், மட்டக்குளி பகுதியில் ஒருவர், வெள்ளவத்தை பகுதியில் 08 பேர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 200 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா – வத்தளை பிரதேசத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





இதனிடையே, நேற்றைய தினம் (27) மேலும் 08 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வத்தளை, பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, அம்பகஹபெலெஸ்ஸ மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களாவர்.
இதன் பிரகாரம், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இதுவரை 103,487 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேநேரம், 94856 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
