மெடிக்கல் ஒக்சிஜன் விநியோகத்தர்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை

மெடிக்கல் ஒக்சிஜன் விநியோகத்தர்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை

வைத்தியசாலைகளுக்கு ஒக்சிஜனை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக ஒக்சிஜனை விநியோகிக்கும் நிறுவனத்துடன் இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களுக்குத் தேவையான ஒக்சிஜனுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் மெடிக்கல் - ஒக்சிஜன் தொழிற்சாலைகளில் ஒக்சிஜன் வழங்கலில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை. தற்போது விநியோகிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிகமான ஒக்சிஜனை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நான்கு மாத காலத்திற்குத் தேவையான ஒக்சிஜன் சுகாதார அமைச்சிடம் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்