கொரோனாவால் பொருளாதார மையங்களுக்கு தாக்கம் ஏற்படாதிருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை!
கொரோனா பரவல் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், கொழும்பு உள்ளிட்ட ஏனைய பொருளாதார மையங்களுக்கு தாக்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மையங்களின் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நேற்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அனைத்து பொருளாதார மையங்களின் முகாமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
பொருளாதார மையங்களில் சுகாதார விதிமுறைகளை உரியவாறு கடைபிடிக்குமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது