நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் நிறைவு

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் நிறைவு

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர், நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பான, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த பரிசோதனை அறிக்கையை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்றைய தினம் கையளிக்க உள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, குருணாகல் மற்றும் பொரலஸ்கமுவை முதலான பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள், இந்தப் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் வங்கிகளுடன் தொடர்புடைய நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுக்கு, பெரும்பாலும் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸுக்கு இணையான வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் என முன்னதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது