இந்தியர்களைத் தனிமைப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது - அமைச்சர் கெஹெலிய (காணொளி)
தொழில் நிமித்தம் பிற நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களைத் தனிமைப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு இந்நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்க அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் முன்வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோது அரசிற்கு எதிராக தனது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
அது குறித்து இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற கருத்துக்கள் வெளியிடப்படலாம்.
எனினும் இது உண்மைக்கு புறம்பான கருத்தாகும்.
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் வெளிநாட்டவர்களை நாட்டுக்கு அழைத்து தனிமைப்படுத்தும் செயற்பாடானது சாத்தியமற்ற ஒன்று என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.