நேற்று அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

நேற்று அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 997 பேரில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

173 பேருக்கு கொழும்பு மாவட்டத்தில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 170 பேர் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 92 பேருக்கும், மொனராகலை மாவட்டத்தில் 86 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 74 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 59 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.

திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பகுதியில் மாத்திரம் நேற்று 42 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் 25 பேரும், நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 22 பேரும், கேகாலை மாவட்டத்தில் 16 பேரும், கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது