வீடு ஒன்றில் பாரிய வெடி விபத்து! இளைஞர்கள் படுகாயம்

வீடு ஒன்றில் பாரிய வெடி விபத்து! இளைஞர்கள் படுகாயம்

இப்பாகமுவ - பன்னல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு (24) இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டாசுகளிலிருந்து வெடிமருந்துகளை அகற்றி, இரும்புக் குழாயில் வைத்து மின் இயந்திரத்தின் மூலம் அந்த குழாயை வெட்டும்போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு இளைஞர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து கொகருல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.