திருகோணமலையில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று
திருகோணமலை மாவட்டத்தில் இற்றை வரைக்கும் 17 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (24)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கொவிட்19 நிலைமைகள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில்,
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7, உப்புவெளி 3, குச்சவெளி 4, கிண்ணியா 2, கந்தளாய் 1 என்றவாறாக கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டள்ளது.
இதில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள 05தாதியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் ஒருவர் ஏற்கனவே கொவிட் தடுப்பூசி ஏற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை நகர் பகுதியில் நேற்றைய தினம் மூன்று பாடசாலையில் இருந்து மாணவன் மற்றும் ஆசிரியர் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் ஆலோசித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.