ரிஷாத் - ரியாஜ் பதியுதீனிடம் சிஐடி விசாரணை (காணொளி)

ரிஷாத் - ரியாஜ் பதியுதீனிடம் சிஐடி விசாரணை (காணொளி)

இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.

ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தமை முதலான குற்றச்சாட்டுகளில், குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்