கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளது
நாட்டில் நேற்றைய தினம் 969 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பேலியகொடை கொவிட்-19 கொத்தணியுடன் தொடர்புடைய 931 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 38 பேருக்கும் நேற்று கொவிட் -19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 99,691 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5,021 ஆக அதிகரித்துள்ளது