வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய முடிவு! சவேந்திர சில்வா
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் 7 நாட்களிலிருந்து 14 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா விகாரங்களின் அறிகுறிகள் உருவாக 14 நாட்கள் ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நோய் தொடர்பான அறிகுறிகள் உருவாக சுமார் 14 நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதையடுத்தே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மாலைக்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார்.