பாடசாலைகள், திருமண நிகழ்வுகள் தொடர்பான சுகாதார கட்டுப்பாடுகள்!
பாடசாலைகள், முன்பள்ளிகளில் 50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுமென இன்று வெளியான சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதுடன், மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருமண நிகழ்வுகளின் போது, மண்டபங்களின் கொள்ளளவில், 50 சதவீதமானோருக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், 150 பேருக்கு மேற்படாதவகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது