நாடு முடக்கப்படாது: கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் - இராணுவத்தளபதி
கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை அறிவித்தார்.
வார இறுதியில், மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும், சுற்றுலாக்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்காமையே இதற்கான காரணமாகும் என அவர் கூறினார்.
இதேவேளை, ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிடத்தக்களவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அப் பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்