பசறையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 4 பேர் பாதிப்பு!

பசறையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 4 பேர் பாதிப்பு!

பசறை - கோணக்கலை - பசறை பிரிவில், நான்கு தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரும், பெண்கள் மூவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பெண் ஒருவர், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

ஏனைய மூவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்