காளான் உணவில் இத்தனை அற்புத மருத்துவ பயன்கள் உள்ளதா...?

காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.

உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வேலையை திறம்பட செய்கிறது. செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது.

 

வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு  காளானாகும். 

 

காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.

 

காளான்வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

 

காளான் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் சிறந்த பலன் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு  உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.