நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த நினைவூட்டல் அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த நினைவூட்டல் அறிக்கை

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் அறிவித்தலாக அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஆரம்பமாகவுள்ள சபை அமர்வுகளின்போது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவித்தல் மும்மொழியிலும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சபை அமர்வுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டிய விதம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற சபையின் 7ஆவது கூட்டம் இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுதவிர, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்