ஹெந்தல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் தம்பதியினருக்கு கொவிட்

ஹெந்தல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் தம்பதியினருக்கு கொவிட்

வத்தளை – ஹெந்தல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் தம்பதியினருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 40 குடும்பங்களை சேர்ந்த 120 பேர் தனிமைப்படுத்துவதற்கு அந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த திருமண தம்பதியினர் வெலியமுன பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கிடையில் மணமகளின் சகோதரிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்