பல்லேகல கிரிக்கெட் மைதான ஊழியருக்கு கொரோனா!

பல்லேகல கிரிக்கெட் மைதான ஊழியருக்கு கொரோனா!

பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிகமாக பணியாற்றிவரும் ஊழியர் ஒருருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று(22) மாலை மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது, குறித்த ஊழியருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மைதான ஊழியர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பலகொல்ல காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இன்றி, கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.

எனினும், மேற்படி தொற்றாளரோ அவருடன் தொடர்பில் இருந்தவர்களோ இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியிருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்