கொரோனா தொற்றால் மூடப்பட்ட காவல்நிலையம்

கொரோனா தொற்றால் மூடப்பட்ட காவல்நிலையம்

கொரோனா பரவல் காரணமாக சிலாபம், கொஸ்வத்தை காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

காவல்நிலைய பரிசோதகர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த காவல்நிலையத்தைச் சேர்ந்த அனைவரும் தற்போது சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான காவல்நிலைய பரிசோதகருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது