இரத்தசோகை உள்ளவர்கள் இந்த பழத்தை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!

ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆப்ரிக்காட் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் குணமாகும்.

நம் உடலில் இரும்பு சத்து, குறைந்தாலும், வைட்டமின் எ, சத்துக்கள் குறைந்தாலும், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தாலும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும் நமக்கு ரத்தசோகை ஏற்படும். இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

 

நாம் உண்ணும் உணவில் இருந்து இரும்புச் சத்துக்கள் அதிகமாக உறிஞ்சப்பட்டு ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த  பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

 

சில பெண்களுக்கு மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். பெண்கள் தினசரி உண்ணும் உணவில் உலர் ஆப்ரிக்காட் பழங்களை சேர்த்துக்கொண்டால் அதிக இரத்தப் போக்கானது கட்டுப்படுத்தப்படும்.

 

உலரவைத்த பழங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்து நம் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் அளிக்காமல் நமக்கு கிடைக்கிறது. நம் உடலின் ஜீரணத் திரவங்கள் சீராக சுரக்க உலர் ஆப்ரிகாட் பழங்கள் உதவியாக உள்ளது.

 

ஆப்ரிக்காட் பழங்களை நீரில் போட்டு ஊறவைத்து அந்த சாரை கொண்டு உங்கள் சருமம் முழுக்க தேய்த்து வந்தால் சருமத்தில் இருக்கும் சொரி, சிரங்கு, வறட்சித்  தன்மை என எல்லாவற்றையும் போக்கி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

 

செரிமான சக்தியை அதிகரிக்கும் அமிலங்களைக் கொண்டுள்ளது இந்த ஆப்ரிகாட் பழம் எனவே இதை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் செரிமான  சக்தியும் அதிகரிக்கும்.