பெப்ரவரியின் பின்னர் நாளொன்றில் 600க்கும் அதிகமான தொற்றாளர்கள் நேற்று பதிவு

பெப்ரவரியின் பின்னர் நாளொன்றில் 600க்கும் அதிகமான தொற்றாளர்கள் நேற்று பதிவு

நாட்டில் நேற்றைய தினம் 672 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் நாளொன்றில் 600க்கும் அதிகமானோருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 657 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 பேருக்கு தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 98,722ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 93,884 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுறுதியான 4,202 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்