பாடசாலை சீருடை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
பாடசாலை சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அடுத்த வருடத்திற்கான சீருடைகளை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம் அதற்கான விலை மட்டங்களைக் கோரி விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தவருடத்திற்கான பாடசாலை சீருடைகளும் இவ்வருட இறுதி பாடசாலை தவணைக்கு முன் மாணவர்களுக்கு வழங்கப்படும். இது குறித்து கல்வி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.