திருமணம் மற்றும் மரண நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
திருமண நிகழ்வுகள், மரணச் சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தொற்று தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.
இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் தொடர்பில் இதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும்; அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்