திடீர் சுகவீனம் - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
. இதேவேளை ஹரின் பெர்ணான்டோவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே, ஹரின் பெர்ணான்டோ அழைக்கப்பட்டிருந்தார்.