கல்வித்துறைக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு
கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
'நாட்டுக்குப் பெறுமதியான நூல்' எனும் தொனிப்பொருளில் 10,000 நூல்களை எழுதும் தேசிய வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கருத்துரைத்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் எதிர்பார்த்துள்ள இலக்கை அடையாத நிறுவனங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இராஜாங்க அமைச்சர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்