இன்றைய ராசி பலன்கள் 16/04/2021

இன்றைய ராசி பலன்கள் 16/04/2021

மேஷம்

சோர்வு நீங்கிச் சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்

ரிஷபம்

பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு.

மிதுனம்

தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பிரியமான சிலரின் சந்திப்பு கிடைக்கும்.

கடகம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

சிம்மம்

வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு.

கன்னி

ஆரோக்கியம் சீராகும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். அலைபேசி வழியில் நற்செய்திகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

விருச்சகம்

யோகமான நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்று வந்து சேரும். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்

தனுசு

தள்ளிப்போன செயல்கள் தானாக நடைபெறும் நாள். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்

மகரம்

தடைகள் விலகும் நாள். தனித்து இயங்க முற்படுவீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம், பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்

லட்சியங்கள் நிறைவேறும் நாள். மனக்குழப்பம் அகலும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். புது முயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

மீனம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் பெருமை உண்டு.