![](https://yarlosai.com/storage/app/news/62ba9265c2737ccefc9b9f2f0fb337a2.jpg)
மொனராகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
மொனராகலை - இத்தேகட்டுவ பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். குறித்த நபரை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் இன்று விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுப்பட்டனர் என கூறப்பட்டுள்ள இந்த தகவலை பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.