தினந்தோறும் உணவில் முள்ளங்கி சேர்த்துகொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

முள்ளங்கியில் வைட்டமின் சி, உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளது.உடலில் ஏற்படும் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக உள்ளது. முள்ளங்கி உடலின் சர்க்கரை அளவை கட்டுபாட்டில் வைக்கிறது. சிறுநீர் கற்களை  கரைத்துவெளியேற்றும். சிறுநீர் தாரை எரிச்சலை போக்கும். ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது.

 

முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

 

முள்ளங்கியை அரைத்து சீரகம் மஞ்சள் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் பசி உணர்வை தூண்டும். ரத்தம் மற்றும் ஜீரணப்பாதையை சுத்தப்படுத்துகிறது.

 

எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

50 முதல் 100 மில்லி முள்ளங்கி சாருடன் சிறளது தயிர் மற்றும் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர அல்சர், மூலம், வெள்ளை போக்கு பிரச்னைகள் சரியாகும்.