கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை: சுமார் 500 பெண் ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம்

கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை: சுமார் 500 பெண் ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம்

கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த 500இற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, தாங்கள் அனுபவித்து வரும் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாப்பு அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர். அதில் நீட்ஃபெல்ட்டின் பிரச்சினையை சுட்டிக் காட்டியுள்ளதுடன், கூகுள் நிறுவனம் எப்படியெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை காப்பாற்றி வந்தது என்பதை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, கூகுள் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊழியர்களின் முறைப்பாடுகளைப் புலனாய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது என்றும் புகார் அளிப்போருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது