கொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 10 ஆயிரத்து 27பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,632பேர் பாதிப்படைந்ததோடு, 168பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
இதற்மைய, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த இரண்டாவது நாடான ரஷ்யாவில் இதுவரை 6 இலட்சத்து 74 ஆயிரத்து 515பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 217,609பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 446,879பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.