கரீபியன் தீவில் எரிமலை சீற்றமடைந்துள்ளது!

கரீபியன் தீவில் எரிமலை சீற்றமடைந்துள்ளது!

கரீபியன் தீவான செயிண்ட் வின்சென்டில் உள்ள சுஃபீயேரா எரிமலை சீற்றமடைந்துள்ளதால் அந்த பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்காண மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பல தசாப்த காலங்களாக செயலற்றிருந்த குறித்த எரிமலையில் இருந்து தற்போது புகை மற்றும் சாம்பல் வெளியேறி வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த எரிமலையில் இருந்து வெளியேறும் புகை சுமார் 6 கிலோமீற்றர் வரை பரவியுள்ளது.

இதன் காரணமாக 4,000 அடி உயரமான குறித்த எரிமலைக்கு அண்டி பகுதிகளில் வசித்து வந்த சுமார் 16,000 பேரை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன