கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று..!
இன்று காலை நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 22 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதுவே ஒரு நாளில் அங்கு பதிவான அதிகளவான தொற்றாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இந்தியாவில் இதுவரையில் 6 இலட்சத்து 48 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கு கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக 18,669 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, அதிகளவான தொற்றாளர்கள் மகாராஷ்ரா, தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை நகரில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2,721 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கு 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.